• JUST IN | சுட சுட

கோல்டன் விசா: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு துபாய் வழங்கல்!





துபாய் அரசின் கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் பெற்றுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து, ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ளார்.

நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சஞ்சய் தத், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து சஞ்சய் தத்தின் சகோதரியான பிரியா தத் புற்றுநோய் அறக்கட்டளையை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்.

இதனிடையே சஞ்சய் தத் அடிக்கடி குடும்பத்துடன் துபாய் சென்று தங்குவது வழக்கம். கடந்த ஆண்டு லாக்டவுன் நேரத்தில் கூட சஞ்சய் தத்தின் மனைவி மான்யா தத் துபாயில் தனியாக சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கத

இந்நிலையில் துபாய் அரசு நடிகர் சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

.

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி அமீரகத்தில் வசிக்க விரும்பும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விஐபிக்கள் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்தது.

இந்த விசாவை காலக்கெடு முடிந்ததும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது. ஆகவே, இந்த விசாவை பெற பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விண்ணப்பித்தார். இதனை பரிசீலனை செய்த துபாய் அரசு சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது

தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள தகவலை நடிகர் சஞ்சய் தத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :