• TRENDING | பர பர

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட உலகின் முதல் மனிதர் இறப்பு!





உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபரான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 81 வயதான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர்,முதன்முதலில் கொரோனா தடுப்பூசி போட்ட உலகின் முதல் மனிதர் என்ற வரலாற்றை உருவாக்கியவர். இதன்மூலம், அவர் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் முதல் நபராகவும் ஆனார்.அதன் காரணமாகவே,கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி உலக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.

இந்நிலையில்,வில்லியம் ஷேக்ஸ்பியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் (மே-25) உயிரிழந்தார். இச்செய்தியை இங்கிலாந்து பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து,இங்கிலாந்தில் உள்ள தொழிற்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்,மறைந்த வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு,தனது இரங்கலை தெரிவிக்கும் வகையில் கூறியதாவது:

இங்கிலாந்து தொழிற்கட்சிக்கு பல வருடங்களாக வில்லியம் சேவை செய்தவர்.எனவே,அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

_ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மறைந்த வில்லியம் ஷேக்ஸ்பியர்,பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் பணிபுரிந்தார் மற்றும் பாரிஷ் கவுன்சிலராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :