• TRENDING | பர பர

என் வாழ்க்கையை படமாக எடுங்கள் : ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாடகி கோரிக்கை!





ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சாதனைகள் படைப்பதுடன், படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் கதை எழுதி தயாரித்த படம் தான் 99 சாங்ஸ்.

இசையை மையமாகக் கொண்ட இப்படத்தில் 14 காதல் பாடல்கள் இடம் பெற்றன. காதலியை கரம் பிடிப்பதற்காக பாடல்கள் மூலம் காதலன் எடுக்கும் முயற்சியை படத்தின் கதையாக வடிவமைத்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். லாக் டவுனுக்கு முன்பு இப்படம் தியேட்டரில் வெளியானது.

தற்போது ஊரடங்கு காரணமாக ஓடிடி தளத்தில் 99 சாங்ஸ் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவான 99 சாங்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படத்தின் தெலுங்கு பதிப்பினை பார்த்த பிரபல பாடகி பி.சுசிலா ஏ.ஆர் ரஹ்மானை மிகவும் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் "எனது வாழ்க்கை கதையையும் சினிமாவாக படமெடுக்க எனக்கு ஆசை இருக்கிறது. அதை நீங்கள் செய்வீர்களா?" என ஏ.ஆர் ரஹ்மானிடம் பி.சுசிலா கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு ஏ.ஆர் ரஹ்மான் சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :