• JUST IN | சுட சுட

3 ஆண்டு ஜெயில்: முறைகேடாக தண்ணீர் சப்ளை செய்யும் தண்ணீர் லாரிகளுக்கு அரசு எச்சரிக்கை!





தமிழகக்தில் இப்போது கோடை காலம் என்பதால், தண்ணீர் பற்றாக்குறை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பல இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் மெட்ரோ வாட்டர் மூலம் வீடுகளுக்கே நேரடியாகவும், தெருக்குழாய்கள் மூலமும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறத

இதற்காக தண்ணீர் வாரிய ஒப்பந்ததாரர்கள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் தேவைப்படுபவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். 6 ஆயிரம் லிட்டர் ரூ.475 மற்றும் 9 ஆயிரம் லிட்டர் ரூ.700 என லாரிகளில் தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பதிவு வரிசைபடி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில்தான் தண்ணீருக்கு பதிவு செய்ய முடியும். ஆனால் அவசர தேவை மற்றும் கூடுதல் தேவைகளுக்காக லாரி ஒப்பந்ததாரர்கள், டிரைவர்கள் மூலமாகவே முறைகேடாக கூடுதல் விலைக்கு தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதை கட்டுப்படுத்த குடிநீர் வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது குறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பு :

முறைகேடாக தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் நாள் முழுவதும் உள்ள டிரிப்புகள் உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும் லாரி உரிமையாளர், டிரைவர் மற்றும் தண்ணீர் வாங்கியவர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் 3 ஆண்டு ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

_ இவ்வாறு தமிழக குடிநீர் வாரியம் தாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :