• JUST IN | சுட சுட

30 நாட்கள் பரோல் கேட்டு நளினி, முருகன் விண்ணப்பம்!





முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த தனது கருத்தை மத்திய அரசு 3 நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அடுத்த சில நாட்களில் 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனால், 7 பேரின் விடுதலை கேள்விக்குறியாக இன்னமும் நீடிக்கிறது.

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் 30 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் நளினி சென்னையில் உள்ள தனது தாயார் பத்மா முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் இலங்கை நாட்டில் வசித்த தனது மாமனாரும், முருகனின் தந்தையுமான வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆகி இருப்பதால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவும் தனக்கும், தன் கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று நளினி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முருகனின் தந்தை வெற்றிவேல் கடந்தாண்டு இறந்தபோது இறுதிசடங்கு செய்வதற்காக பரோலில் செல்ல முருகன் அனுமதி கேட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :