• JUST IN | சுட சுட

கொரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது : அமைச்சர் உத்தரவு!





கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முழு கவனமும் செலுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பாக சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது. அதில் விரும்பமுள்ள ஆசிரியர்களை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொள்ள ஏதுவாக கூடுதல் தடுப்பூசியை மாநில சுகாதார துறையிடும் கேட்டுள்ளோம். விரைவில் அவை கிடைத்துவிடும்.

- இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :