• JUST IN | சுட சுட

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் அவசர ஆலோசனை.





தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை செய்கிிறார்.

தமிழகத்தில் கொரோனோ 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எதிர்கட்சிகள் என அனைவரும் கோரிக்கை விடுத்த நிலையில். ஆலோசனை மேற்கொண்டு தமிழகத்தில் மீண்டும் மே-31 வரை தளர்வற்ற ஊரடங்குக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பில் உணவகங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் மட்டுமே அனுமதி அளித்து உத்தரவிட்டது நாளை காய்கறி கடைகள் மளிகை கடைகள் போன்ற கடைகளுக்கு தளர்வு அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் பணியை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் முழு ஊரடங்கு முதலில் ஒரு வாரத்திற்கு செயல்படுத்தலாம் எனக் கருத்துக் கூறப்பட்டது. தற்போதுள்ள முழு ஊரடங்கால் முழு திருப்தி இன்னும் கிடைக்கவில்லை வரும் நாட்களில் சூழலை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :