• TRENDING | பர பர

ரோஜாப்பூ நிறத்தில் மாறுகிறது பெண்களுக்கான இலவச பேருந்துகள்!





தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கையோடு மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிிவித்தார் இதையடுத்து இத்திட்டம் பெண்கள் மத்தியில் அமோகவரவேற்பை பெற்றது.

மாநகர பேருந்துகளில் விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மாநகர அரசு பேருந்து அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெணகளுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் சில பேருந்துகளில் நடத்துனர், பெண்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

இதனை தவிர்க்கவும் மக்களின் குறைகளை களையவும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு தனியாக பிங்க் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி பேருந்துகளின் நிறம் பிங்க் நிறமாக மாற்றப்படும் அல்லது பேருந்துகளில் பிங்க் நிற பட்டை பெயிண்ட்கள் மூலம் அடையாளப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் இயக்கப்படும் 330 பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :