• JUST IN | சுட சுட

தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ 384 அதிகரிப்பு!





சென்னையில் இன்று ஒரே நாளில்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 384 அதிகரித்து, ரூ. ரூ. 37,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது

கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 48 உயர்ந்து, ரூ. 4,650-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ. 384 உயர்ந்து, ரூ. 37,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.77,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளி ரு. 77.30-க்கு விற்பனையாகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :