• TRENDING | பர பர

ஹிட்லர் மீசையில் கவுண்டமணி : வைரல் போட்டோ!





சினிமாவில் காமெடி நடிகர்களைப் பொறுத்தவரை, கவுண்டமணிக்கு தனி இடம் உண்டு. கவுண்டமணி காமெடி வேடங்களில் மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் அசால்ட்டாக நடித்து ஸ்கோர் செய்பவர்.

கவுண்டமணி போலவே தன்னுடைய தனி பாணியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற காமெடி நடிகர் ஜனகராஜ்.

இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய பட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜனகராஜ்.

கவுண்டமணி பிறந்தநாளான இன்று அவரை வாழ்த்தி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மிகவும் பழமையான இந்த புகைப்படத்தில் ஜனகராஜ் ஒல்லியாக ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார். அதேபோல் கவுண்டமணி ஹிட்லர் மீசை வைத்துள்ளார்.

இது எந்த படத்தின் புகைப்படம் என்பதை பகிர்ந்து கொள்ளாமல் வெறும் புகைப்படத்தை மட்டும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் ஜனகராஜ்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :