• JUST IN | சுட சுட

10 ஆண்டுகளாக இன்னும் பணம் கிடைக்கவில்லை : ஐபிஎல் வீரர் புகார்!





ஐபிஎல் 2011 கிரிக்கெட் சீசனில் ஆஸ்திரேலிய இடது கை வீச்சாளர் பிராட் ஹாட்ஜ், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக விளையfடினார். அதற்கான தனக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என்றும், தனது ஐபிஎல் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரக் கோரியும் பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் உலக டி20 போட்டித் தொடருக்கான பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள வீராங்கனைகளுக்கு இந்த வாரத்தில்தான் இன்வாய்ஸ் கோரியுள்ளது பிசிசிஐ.

இந்த செய்தி பிரிட்டன் செய்தி ஊடகம் ஒன்றில் வெளியாக அதனையடுத்து பிராட் ஹாட்ஜ் தனக்கும் இன்னும் 2011 ஐபிஎல் தொகையைல் நிலுவை உள்ளது என்றும் பிசிசிஐ அதை பெற்றுத்தர முடியுமா என்றும் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக பிராட் ஹாட்ஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக ஆடிய வீரர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் 35% தொகை வந்து சேரவில்லை. பிசிசிஐ அந்தப் பணத்தை பெற்று தர முடியுமா?

- இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் பிராட் ஹாட்ஜ் கேட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த கொச்சி டஸ்கர்ஸ் அணிக்காக 14 போட்டிகள் ஆடினார் ஹாட்ஜ். 285 ரன்களை 35.63 என்ற சராசரியில் எடுத்தார். வங்கி உத்தரவாதம் அளிக்காததால் பிசிசிஐ கொச்சி டஸ்கர்ஸ் அணியை நீக்கியது. பின்னர் பல்வேறு அணி கருக்காக பிராட் ஹாட்ஜ் இதுவரை ஐபிஎல் தொடரில் 66 போட்டிகளில் விளையாடியுள்ளார்..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :