• TRENDING | பர பர

மைதான் படத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் : போனி கபூர் வருத்தம்!





இதுவரை தான் எடுத்த படங்களிலேயே தனக்கு மிகவும் மன அழுத்தத்தைக் கொடுத்தது மைதான் திரைப்படம் தான் என்று பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். இவர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார்.

இந்தியில் பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தமிழிலும் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தயாரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் போனி கபூர் தற்போது தயாரிக்கும் மெகா பட்ஜெட் படமான மைதான், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தி தன்னை மன வேதனைக்கு உள்ளாகியதாக குறிப்பிட்டுள்ளார்.

அஜய் தேவ்கன் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கிட்டத்தட்ட 2 கோடி செலவில் செட் போடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வந்தால் டவ் தே புயல் காரணமாக அந்த செட்டிங் வீணாகிவிட்டது. இதனால் மீண்டும் செட்டிங் போட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் போனி கபூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :