• JUST IN | சுட சுட

டிவிட்டர், பேஸ்புக்: இந்தியாவில் இன்று ஒரு நாள் அவகாசம்!





இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை முக்கிய சமூக வலைதளங்களாக உள்ளன. இதில் சில சமயம் போலியான தகவல்கள், வதந்திகளும் பரவிவருகிறது.வது எனினும் இதில் பல்வேறு நன்மையான அம்சங்கள் நிறைந்துள்ளன.

இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை ஏற்படுத்தி, அவற்றை ஏற்குமாறு பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்பது குறித்து ஒப்புதலை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இந்திய அரசுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் அவற்றுக்கு மத்திய அரசு தடை விதிக்குமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :