• JUST IN | சுட சுட

ஜூன் - 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு!





தமிழ் நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் மே 31 வரை 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு :

சென்னை சென்ட்ரல் - கோவை இடையே, தினமும் பகல் நேரத்தில் இயக்கப்படும், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மற்றும் சென்னை எழும்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை இருவழிகளிலும், ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் - கர்நாடக மாநிலம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் இடையே, தினமும் இயக்கப்படும், `ஏசி` டபுள் டெக்டர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை இடையே , வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் தேஜஸ் ரயில் , இருவழிகளிலும் , ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாகர்கோவில் - கோவை இடையேயும், கோவை - கர்நாடக மாநிலம் மங்களூரு இடையேயும், தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், இரு வழிகளிலும், ஜூன் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில்கள் அனைத்தும், இம்மாதம், 31ம் தேதி வரை ரத்து செய்யப் பட்டிருந்தன. தற்போது, ஜூன் 15 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. மேலும் எழும்பூர் - திருச்சி, கோவை - மங்களூரு, சென்னை - பெங்களூரு, எழும்பூர் - மதுரை ஆகிய சிறப்பு ரயில்கள் ஜூன் 15 வரை ரத்து செய்யப் பட்டுள்ளன.

- இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :