• JUST IN | சுட சுட

என் பலத்தை காட்ட கொலை செய்தேன் : மல்யுத்த வீரர் சுஷில்குமார்!





இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம்் வென் ற மல்யுத்த வீரரான சுஷில் குமாரை, கொலைை வழக்கில் போலீஸ் கைது செய்தது

சுஷில் குமார் தன் சக மல்யுத்த வீரரான சாகர் ரானா என்பவரை தன் நண்பர்களுடன் சேர்ந்து டெல்லி சத்ரசல் மைதானத்தில் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சுஷில்குமார் தலைமறைவானார்.

சுஷில் குமாரை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு டெல்லி போலீசார் ரூ 1 லட்சம் சன்மானம் அறிவித்த நிலையில், டெல்லி போலீசார் நேற்று முன்தினம் இவரை கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இறந்த மல்யுத்த வீரர் சாகர் ரானாவின் தந்தை தன் தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

சுஷில் குமார் மற்றும் அவரது உதவியாளரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தில், தனிப்படை போலீசார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இதில் சுஷில்குமார் கூறியதாவது:

ரானாவை நான் அடிக்கும் காட்சியைவீடியோ எடுக்குமாறு என் நண்பர் பிரின்ஸிடம் சொன்னேன். காரணம், என்னுடைய பலத்தைக் காட்டுவதற்கும், என்னை எதிர்த்து யாரும் நிற்கக்கூடாது என்ற எச்சரிக்கைக்காகவும் அவ்வாறு செய்தேன்.

- இவ்வாறு சுஷில் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து மேலும் விபரங்கள் சேகரிக்க சுஷில் குமாரை போலீஸ் காவலில் 6 நாட்கள் எடுக்க ரிமாண்ட் அறிவிக்கப்பட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :