• TRENDING | பர பர

கொரோனாவை விரட்ட கழுதைப்பால் : தர்மபுரியில் அமோக விற்பனை!





தர்மபுரி மாவட்டத்தில் சீதோசன நிலை மாற்றத்தினால் பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் என்று அவதிப்படுகின்றனர். இந்த அறிகுறிகள் காரணமாக கொரோனா வாக இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சளி இருமல், காய்ச்சல் போன்றவற்றை கழுதைப் பால் உடனே குணப்படுத்தும் என்று அப்பகுதி மக்களிடையே நம்பப்படுகிறது. மேலும் கழுதைப் பால் அருந்தினால் கொரோனாவை விரட்டக் கூடிய அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுவதால் தர்மபுரியில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கழுதையுடன் வீடு வீடாக சென்று பாலை கறந்து கொடுத்து வருகின்றனர். ஒரு டம்ளர் கழுதைப்பால் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிறது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற மன நிலையில் கொண்டு வந்து விட்டது இந்த கொரானா .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :