• TRENDING | பர பர

1 மணி நேரத்துக்கு ரூ 7 லட்சம் கட்டணம் : பறக்கும் விமானத்தில் அசத்தல் திருமணம்!





மதுரையைச் சேர்ந்த மணமக்கள் ராகேஷ் மற்றும் தீக்சனா, நேற்று பறக்கும் விமானத்தில் திருமணம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மகன் ராகேஷ். மதுரை தொழிலதிபர் மகள் தீக்சனா. இவர்களின் திருமணத்தை வித்தியாசமான முறையில் பறக்கும் விமானத்தில் நடுவானில் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி நேற்று தனியார் விமானத்தை 2 மணி நேரம் வாடகைக்கு முன்பதிவு செய்தனர். நேற்று காலை 7.30 மணியளவில் திருமண ஜோடி உள்பட உற்றார், உறவினர்கள் 161 பேருடன் விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை சென்று திரும்பியது. விமானம் காலை 7.30 மணிக்கு புறப்பட்ட நிலையில், நடுவானில் உறவினர்களின் வாழ்த்து கோஷத்திற்கு மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார்.

மதுரையில் புறப்பட்ட விமானம் தூத்துக்குடி வரை சென்று விட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளி இல்லாமல், முகக்கவசம் அணியாமலும் திருமணத்தில் பங்கேற்றது தவறான முன்னுதாரணம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 7 லட்சம் வீதம் 2 மணி நேரத்திற்கு 14 லட்சம் தனியார் விமானத்திற்கு வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :