• JUST IN | சுட சுட

காய்கறி விலையேற்றம் : வணிகர் சங்கம் கண்டனம்.





தமிழ்நாட்டில் இன்று முதல் 31-ம் தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் காய்கறி மற்றும் பழங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, வீடு தேடி வந்து விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திலையில் காய்கறிகளின் விலையேற்றத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

காய்கறி, பழம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி ஊரடங்கு நாட்களிலும் கிடைத்திட, நேரடி விநியோகம் செய்திட சென்னையை பொருத்தவரை கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக இயங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை வாகனங்களில் நேரடியாக கொண்டு சென்று, அந்தந்த பகுதிகளிலேயே விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு சிலர் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி வருவதாக வரும் தகவல்களை அடுத்து, அதுபோன்றவர்களை வன்மையாக எதிர்ப்பதோடு, மக்களுக்கு துரோகம் செய்யும் அதுபோன்ற நபர்களை வணிகம் செய்யும் நிலையில் இருந்து கட்டாயம் நீக்கிவிடக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

_ இவ்வாறு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :