• தினம் ஒரு ரசம்

பெருங்காயம் பூண்டு ரசம்


விஜிவீரா, மஸ்கட்

ஆப்பிள் தக்காளி - 3,

சீரகம் - சிறிதளவு,

வெந்தயம் - சிறிதளவு,

மஞ்சள் தூள்- சிறிதளவு

பூண்டு - 10-15 பல்,

கறிவேப்பிலை - ஒரு கொத்து,

மல்லி இழை - சிறிதளவு,

உப்பு-தேவையானளவு,

புளி -சிறிதளவு,

கடுகு -1 டீஸ்பூன்,

வரமிளகாய் – 4

ஆயில் - 2-3 டேபிள்ஸ்பூன்

பொடிக்க, சீரகம் - 1டீஸ்பூன்,

மிளகு- 1½ டீஸ்பூன்,

பெருங்காயம் - ¼ டீஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு,

கறி வேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பொடியாக நறுக்கிய தக்காளி அதனுடன் சிறிது சீரகம், சிறிது வெந்தயம், பொடித்த சீரகம் மிளகு பொடி, கறிவேப்பிலை, சிறியதளவு புளி, பூண்டு 5, கொத்தமல்லி சிறிது சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். ஆறிய பின் அவற்றை நன்கு கரைத்துகொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து மீதமுள்ள பூண்டை நன்கு தட்டி எண்ணெய்யில் சேர்க்கவும் கரைத்த தக்காளி கரைசலை சேர்க்கவும், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நுரை கட்ட வரும் போது மீண்டும் சிறிது பெருங்காயப்பொடி சேர்த்து நுரைகட்டியதும் கொத்தமல்லி தூவி இறக்கி விடவேண்டும் வாயு தொல்லையாக இருக்கும் போது.நெஞ்சு கரித்தது போல் இருக்கும் . இந்த ரசம் ஜீரணத்துக்கு மிக நல்லது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :