• தினம் ஒரு ரசம்

ஓமவல்லி மிளகு ரசம்


ஜெயந்தி நாகராஜன், பாண்டிச்சேரி

இன்றைய காலகட்டத்தில் வாரம் இரண்டு முறையாவது கட்டாயம் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

ஓமவல்லி இலை-10;

புளி-சிறிய உருண்டை,

உப்பு, வெல்லம், நெய் தேவைக்கேற்ப.

வறுத்த பொடிக்க :

தனியா, மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல், கருவேப்பிலை

செய்முறை:

ஓமவல்லி இலைகளை நன்கு அலம்பி,2 டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். இதை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் வடிகட்டி, அந்த தண்ணீரில்,புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்.வறுத்தரைத்த பொடி, வெல்லம், தேவையான தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்தவுடன் இறக்கி, நெய்யில் கடுகு தாளிக்கவும்.

சுவையான ஆரோக்கியமான ஓமவல்லி மிளகு ரசம் தயார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :