• தினம் ஒரு ரசம்

மாங்காய் ரசம்


என்.கோமதி, நெல்லை

என்னவெல்லாம் வேணும்...

மாங்காய் 1 சிறிது;

மிளகு 10 எண்ணம்;

சீரகம் 1டீஸ்பூன்;

இஞ்சி துருவல் அரை டீ ஸ்பூன்;

பூண்டுபல் 3,

மஞ்சள் தூள் 2 சிட்டிகை,

நெய் 1டீஸ்பூன்,

உப்பு திட்டமாக,

கறிவேப்பிலை சிறிது.

எப்படி செய்வது?

மாங்காயை துருவவும். ஒரு பவுலில் போட்டு, 2 டம்ளர் நீர் ஊற்றவும். லேசாக கசக்கவும். மஞ்சள் தூள், உப்பு, போடவும். மிளகு, அரை ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து லேசாக வறுத்து பொடித்து சேர்க்கவும்.

வாணலியில் நெய் விட்டு, மிதமான தீயில் அரை ஸ்பூன் சீரகத்தை பொரித்து, பூண்டு பற்களை பொடியாக நறுக்கி வதக்கவும்.பொன்னிறமானதும், மாங்காய் கரைசலை விட்டு, சூடு வந்தவுடன் தீயை அணைத்து, கறிவேப்பிலையை தூவிமூடி விடவும். அவ்ளோதான். சூடான சாதத்தில், தெளிவாக விட்டு, கலந்து சாப்பிட்டுப் பாருங்களேன். செம செம சூப்பர் சூப்பர் அட்டகாசம் என்பீர்கள். அப்புறம் ரசம் கொதிக்கக் கூடாது. நோட் திஸ் பாயின்ட் மேடம்ஸ்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :