• தினம் ஒரு ரசம்

ஒப்பிட்டு ரசம்


செல்வி, கோடம்பாக்கம் சென்னை

ஒப்பிட்டு செய்யும் போதெல்லாம் இந்த ரசம் செய்வார் என் அம்மா.

ஒப்பிட்டு செய்ய எங்கள் கிராமத்தில் துவரம் பருப்பு தான் பயன்படுத்துவோம்.

செய்முறை:

ஒப்பிட்டு செய்ய துவரம் பருப்பை வேக வைக்கவும். பருப்பு குழையக் கூடாது. பருப்பு வெந்ததும் தண்ணீர் இல்லாமல் வடித்து அரைக்கவும். இத்துடன் வெல்லம் சேர்த்து அரைத்து, ஏலக்காய் பொடித்து சேர்த்து உருண்டையாக செய்து எடுத்து வைக்கவும். இந்த உருண்டை ஒன்றை எடுத்து, ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அத்துடன் தக்காளி, கரைத்த புளி, தட்டிய மிளகு, சீரகம், பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி அனைத்தும் சேர்த்து நன்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். கரைத்து வைத்துள்ள பருப்பு கரைச்சலை ஊற்றவும். ரசம் பொங்கும் போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த ஒப்பிட்டு ரசம் சாப்பிட அருமையாக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :