• தினம் ஒரு ரசம்

அவசர ரசம்


ராதிகா ரவீந்திரன், திருவான்மியூர்

தேவையான பொருட்கள்:

புளி - நெல்லிக்காய் அளவு

தக்காளி - பழுத்தது-1

மிளகு - 1/4 ஸ்பூன்

சீரகம் - 1/4ஸ்பூன்

தனியா - 1/4ஸ்பூன்

துவரம்பருப்பு - 1/4 ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - சிறிது

உப்பு - தேவையான அளவு

நெய் - 1/2 ஸ்பூன்

பச்சை கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

மிளகு, சீரகம், தனியா, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு, ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, புளி, தக்காளியுடன் சேர்த்து, அரைத்து, உப்பு, 1/2லிட்டர்

தண்ணீரில் கரைத்து, பாத்திரத்தில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி வைத்து, நெய்யில், கடுகு, பெருங்காயம் தாளித்து கொட்டி கொத்தமல்லி இலை கிள்ளிப் போலவும். செய்வது சுலபம். சுவையோ அபாரம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :