• தினம் ஒரு ரசம்

வெந்தய சூப் ரசம்


ராதா நரசிம்மன், பெங்களூர்

தேவையான பொருட்கள்:-

குழைய வேக வைத்த துவரம் பருப்பு -1 கப்

வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 2

வரமிளகாய் - 5

மஞ்சள் பொடி - சிட்டிகை

புளி - நெல்லிக்காய் அளவு

கடுகு, நல்லெண்ணை - தாளிக்க

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தக்காளியை சிறு துண்டங்களாக நறுக்கி போட்டு அதனுடன் புளி, தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும், ஆறினதும் கையால் நன்கு கரைத்து வடிகட்டி சக்கையை அகற்றி ரசத்தை மட்டும் எடுத்து வைக்கவும்.

கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணை விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, மஞ்சள் பொடி கிள்ளிய வரமிளகாய்,வெந்தயம் போட்டு சிவந்ததும், அதில் வடிக்கட்டிய புளிதக்காளி நீரை சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் பருப்பு சேர்த்து பொங்கும் தருவாயில் இறக்கவும் பிறகு பறிமாறவும்.

சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம், சூப்பாகவும் குடிக்கலாம் அட்டகாசமான சுவை யுடன் இருக்கும் இந்த சூப் ரசம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :