• தினம் ஒரு ரசம்

அரிசித் திப்பிலி ரசம்


ஹேமலதா சீனிவாசன், பம்மல்.

தேவையான பொருட்கள்:-

புளி- ஒரு பெரிய எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

பெருங்காயத்தூள்- கால் ஸ்பூன்

பருப்பு வேகவைத்த நீர்

தாளிக்க - நெய் ஒரு ஸ்பூன்,

கடுகு ஒரு ஸ்பூன்.

கொத்தமல்லிதழை- ஒருபிடி

பொடித்துக் கொள்ள:-

துவரம் பருப்பு - ஒரு ஸ்பூன்

தனியா. - ஒரு ஸ்பூன்

மிளகு - ஒரு ஸ்பூன்

வரமிளகாய் - 1

கண்டந்திப்பிலி - 2 குச்சி

அரிசித் திப்பிலி- 2 குச்சி

நெய்- 1ஸ்பூன்

செய்முறை :

ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் பொடிக்க வேண்டிய பொருட்களை வறுத்து ஆறியதும் பொடி பண்ணிக் கொள்ளவும். புளியைக் கரைத்து பாத்திரத்தில் ஊற்றி அதில் மஞ்சள் தூள், தேவயான உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு அதில் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் பருப்பு ஜலம் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின் இறக்கி வைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் ஒரு ஸ்பூன் கடுகு போட்டு தாளித்து கொட்டவும். ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை அரிந்து போடவும். கம கம கண்டந்திப்பிலி அரிசித் திப்பிலி ரசம் ரெடி. இதில் தக்காளி சேர்க்கக் கூடாது. கண்டந்திப்பிலி மூட்டு வலியைப் போக்கும். அரிசித் திப்பிலி பித்தம், கபம் போக்கும். லேசாகக் கசக்கும். ஆனால் மருத்துவ குணம் நிறைந்தது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :