• JUST IN | சுட சுட

26-ம் தேதி வானில் நிகழும் மேஜிக்! ரத்த நிறத்தில் முழு நிலவு!





வரும் 26ஆம் தேதி நிகழ இருக்கும், சந்திர கிரகணத்திற்கு பின் நிலவு ரத்த நிறத்தில் ஜொலிக்கும் என்று வான் மண்டல ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.தை எங்கு,

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற 26ஆம் தேதி பவுர்ணி நாளன்று நிகழவுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும்.

வரும் 26ஆம் தேதி சந்திர கிரகணத்தை இந்தியாவில் பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் காண முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது நீண்ட சந்திர கிரகணமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொல்கத்தாவில் மாலை 6.15 முதல் 6.22 வரை மட்டுமே இந்த சந்திர கிரகணத்தை காணலாம் . சென்னை , மும்பை , டெல்லி ஆகிய நகரங்களில் முழு சந்திர கிரகணம் தெரியாது. பகுதியளவு மட்டுமே காண முடியும்.

அதே நேரத்தில் ஆசிய ஐரோப்பிய நாடுகளில் பல .ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் முழு ரத்த நிலவைக் காணலாம்.

சந்திர கிரகணத்திற்கு பின்னர் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது வளிமண்டல ஒளிச்சிதறல் ஏற்படும். இதன் காரணமாகவே ரத்தச் சிவப்பாக மாறுகிறது. இதனை ஆங்கிலத்தில் Blood Moon என்று கூறுகின்றனர்.

இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றாலும், தமிழழகத்தில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :