• TRENDING | பர பர

மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து: பிரபலத்துக்கு குவியும் லைக்ஸ்!





மறைந்த காங்கிரஸ் தலைவரும். தொழிலதிபருமான வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் தனது மனைவிக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளது பிரபலமாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வெளியான சென்னை-28, மங்காத்தா, பிரியாணி, நண்பன், வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய் வசந்த். இவர் வசந்த் அண்ட் கோ வின் உரிமையாளரும் கூட. சமீபத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் விஜய் வசந்த் தனது மனைவி நித்யாவுக்கு திருமண நாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :