• தினம் ஒரு ரசம்

சோம்பு ரசம் ரெசிபி


ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

தேவையானவை :

தக்காளி பழம் 5,

சோம்பு 2 டீஸ்பூன்,

கடுகு 1 டீஸ்பூன்,

சாம்பார் வெங்காயம் 4,

பச்சை மிளகாய் 3,

கறிவேப்பிலை 1 இணுக்கு,

மிளகு தூள், சீரக தூள் அரை அரை டீஸ்பூன்,

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்,

நறுக்கிய கொத்தமல்லி தழை ஒரு பிடி அளவு,

நெய் ஒரு டீஸ்பூன்,

உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை :

தக்காளி பழங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும்வரை தண்ணீர் விட்டு ஐந்தாறு நிமிடம் கொதிக்க விடவும். பின் இறக்கி வைத்து ஆறியதும் பழங்களின் தோலை உரிக்கவும். வேக வைத்த நீரில் மேலும் 2 கப் நீர் சேர்த்து, உரித்த பழங்களை அதில் போடவும். கைகளால் நன்கு அழுத்தி பிசைந்து தக்காளியை கரைக்கவும். கரையாத துண்டுகளை நீக்கி விடவும். வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விடவும். சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து அவை பொரிந்ததும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்க்கவும். அனைத்தும் வதங்கியதும் தக்காளி கரைசலை சேர்த்து கொதி வரும்போது மஞ்சள், மிளகு, சீரகம், உப்பு தூள்கள் சேர்க்கவும். பொங்கி வரும்போது ஒரு டீஸ்பூன் நெய், மல்லிதழை சேர்த்து இறக்கவும். சுவையான சோம்பு ரசம் தயார்.

Comments

Sangeetha Sundhar says :

Awesome

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :