• தினம் ஒரு ரசம்

வேப்பம்பூ ரசம்


லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

தேவையான பொருட்கள்:


புளி - சிறிதளவு


மிளகாய் வற்றல் - 4


தேவையான அளவு உப்பு பெருங்காயம். கருவேப்பிலை நெய்


வேப்பம்பூ - 2 ஸ்பூன்

செய்முறை :-

சுடு தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு புளியை நன்றாகக் கரைத்து புளித்தண்ணீரை ஈய சொம்பில் அடுப்பில் வைக்கவும். அதில் இரண்டு மிளகாய் வற்றலை கிள்ளிப் போடவும். தேவையான அளவு உப்பு பெருங்காயம் சேர்க்கவும். நன்றாக கொதித்த உடன் புளியின் பச்சை வாசனை போனவுடன் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் சிறிது கடுகு கருவேப்பிலையும் தாளித்து போடவும். பிறகு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு மிளகாய் வற்றலையும் வேப்பம் பூவையும் அதில் போட்டு நன்றாக சிவக்க வறுத்து அந்த ரசத்தில் சேர்த்தால் இப்போது சுவையான ‘வேப்பம்பூ ரசம்’ தயார். இதனை சூடாக சாப்பிட்டால் பித்தம் பசியின்மை போன்றவை நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :