• TRENDING | பர பர

ரவுடி பேபி பாடலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் : வைரல் வீடியோ!





ரவுடி பேபி பாடலில் தனது முகத்தை இணைத்து வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களில் ஒருவரான வார்னர், இ அவ்வப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என இந்தியா சினிமா படங்களின் பாடல்கள் அல்லது சீன்களுக்கு டிக் டாக் செய்து வீடியோ வெளியிடுவதும், அந்த வீடியோ ட்ரெண்ட் ஆவதும் வழக்கம். புட்டபொம்மா பாடலுக்கு வார்னர் ஆடிய டான்ஸ் மிக பிரபலமாயிற்று.

இந்நிலையில் ஐபில் தொடர் தொடங்கியபிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த வார்னர், தற்போது மீண்டும் தனது கிரியேடிவிடியை ஆரம்பித்து விட்டார்.

இந்த முறை மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடலை எடிட் செய்து, அதில் தனுஷ் முகத்திற்கு பதிலாக தன் முகத்தை வைத்து, அதில் சாய் பல்லவியுடன் நடனம் ஆடுவதுபோல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வார்னர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

https://www.instagram.com/p/CPDPuXKlC27/?utm_source=ig_embed&ig_rid=412c3363-190c-4e3c-9330-97bc9771861d

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :