• JUST IN | சுட சுட

பீர் பாட்டில் வீசி மாடல் பெண் மீது தாக்குதல்: பிரபல நடிகை மீது வழக்கு!





தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் மீது போதை மருந்து பதுக்கல் தொடர்பான வழக்கில் கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் சஞ்சனா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கைதாவதற்கு முன்பாக, ஒரு மாடல் பெண் மீது பீர் பாட்டிலால் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இப்போது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில் மாடல் அழகி வந்தனாவுக்கும் சஞ்சனா கல்யாணி இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இன்று வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரத்தில் சஞ்சனா கல்ராணி பீர் பாட்டில்களை எடுத்து வீசி சரமாரியாக தாக்கியதாக இப்போது வழக்கு பதிவு செய்துள்ளார் வந்தனா.

இதில் வந்தனாவின் கண்பார்வை பாதிக்கப்பட்டதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது. இதையடுத்து சஞ்சனா கல்ராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கப்பன் பார்க் போலீசில் வந்தனா புகார் செய்தார். ஆனால் போலீசார் சஞ்சனா கல்ராணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நீதிமன்றத்திற்கு சென்று, சஞ்சனா மீது நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கப்பன் பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகை சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது கப்பன் பார்க் போலீஸ்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :