• JUST IN | சுட சுட

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!





தமிழகத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் பகுதியில் உருவான `டவ்தே புயல்`, கரையை கடந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும், நாளையும், வட கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலபகுதிகளில் மழை பெய்தாலும், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது-

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :