• JUST IN | சுட சுட

கரும் பூஞ்சை தொற்று : தூத்துக்குடியில் ஒருவர் பலி!





தூத்துக்குடியில், கண்ணில் கரும்பூஞ்சை தொற்று பாதித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் 57 வயது முதியவர். இவர் வெல்டிங் பட்டறை உரிமையாளர் ஆவர். இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று என கூறப்பட்டுள்ளது. இதற்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் டெஸ்டும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது. இருப்பினும் அவரது உடல் பலகீனம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் அவரது கண்ணில் உள்ள இரத்த நாளங்கள் சிவப்படைந்து, கரும்பூஞ்சை தொற்றுஉருவாகியது. ஸ்டீராய்டு மருந்துகளை அதிகரித்து பயன்படுத்துவதால், மயூகர் மைகோஸிஸ் எனும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்காகவும் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :