• JUST IN | சுட சுட

மாவட்டம் தோறும் கோவிட் கட்டளை மையம் : தமிழக அரசு அறிவிப்பு!





தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கோவிட் கட்டளை மையங்களின் தொடர்பு எண்களை அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் 2-வது அலை புதிய உச்சத்தை எடியுள்ளது.. சராசரியாக தினமும் 33,000 பேருக்கு தொற்று பாதிப்ப் உ றுதியாகி வருகிறது.. இந்த சூழலில் தமிழ்நாட்டில் உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள அனைத்துப் படுக்கைகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது..

இந்த சூழலில் தான் தமிழக அரசு, கோவிட் கட்டளை அறை என்ற ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் உதவி மையத்தை உருவாக்கி உள்ளது.. ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை, வென்டிலேட்டர், ஆம்புலன்ஸ் அனுப்புவது, முன்னுரிமை அடிப்படையில் நோயாளிகளைச் சேர்ப்பது ஆகிய விவரங்கள் இந்த கோவிட் கட்டளை அறை மூலம் தெரிந்து கொள்ளலாம்..

இந்த கட்டளை அறையை பல்வேறு விதங்களில் தொடர்பு கொள்ளலாம்.. தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் 104 என்ற எண்ணை அழைக்கலாம்.. அல்லது கட்டளை அறையின் ட்விட்டர் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து தொடர்பு கொள்ளலாம்.. இந்நிலையில் மாவட்டம் வாரியாக ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் தொடர்பு எண்களை அரசு அறிவித்துள்ளது.. அதன் முழு விவரம் இதோ..




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :