• JUST IN | சுட சுட

கட்சித் தொண்டர்கள் என்னைப் பார்க்க வரவேண்டாம் : முதல்வர் அதிரடி!





தமிழகத்தில் சேலம், ஈரோடு, மற்றும் கோவை மாவட்டங்களில் கொரோனோ தடுப்பு பணிகள் குறித்து பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார். இன்றும் நாளையும் இப்பகுதிகளில் ஆய்வு செய்யவிருப்பதால், கட்சித் தொண்டர்கள் யாரும் தன்னை சந்திக்க முயற்சிக்க வேண்டாம் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் தோற்று பாதிப்பின் காரணமாக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் முதலமைச்சர் தலைமையில் தினந்தோறும் தொற்று பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக கொரோனோ தடுப்புப் பணிகளை குறித்து ஆய்வு செய்வதற்காக சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஆய்வு நடத்த உள்ளார்.

மேலும் இந்த பயணமானது முழுக்க அரசு சம்பந்தப்பட்டது மற்றும் பொதுமக்களை பாதுகாப்பும் பணி தொடர்பானது என்று கூறியுள்ளார். இதனால் கழக நிர்வாகிகள் யாரையும் நான் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். நம்முடைய கழக நிர்வாகிகள் அனைவரும் மக்களுக்கு தொடர்ந்து "ஒன்றிணைவோம் வா" பணியில் ஈடுபட்டு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகைய பணியில் ஈடுபடும் பொழுது பாதுகாப்பு விதிகளை பின்பற்றி அனைவருக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நான் செல்லும் இடங்களில் என்னை சந்திக்க இது எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ள கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எனக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பட்டாசு வெடிப்பது, பதாகைகள் வைப்பது, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளை கட்டுவது போன்ற செயல்களில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது. மேலும் கழக உடன்பிறப்புகள் ஆனா உங்களை சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தை மட்டுமே தரும்

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரின் நலம் முக்கியம் என்பதால் என்னுடைய வேண்டுகோளை ஏற்று கழக நிர்வாகிகள் அனைவரும் செயல்பட வேண்டும்.

- இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

தொண்டர்களின் மனம் புண்படா வண்ணம் வேண்டுகோள் விடுத்த முதல்வருக்கு பாராட்டுக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :