• TRENDING | பர பர

கொரோனா வராமல் தற்காப்பது எப்படி? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வைரல் வீடியோ!





தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை கோரத் தாண்டவமாடி வருகிறது. தமிழகத்திலும் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தநிலையில், முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/i/status/1394870039862337538

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :