• TRENDING | பர பர

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன்!





இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி என்று நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் ஒரு பயம் கலந்த குழப்பமும் இருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சில பிரபலங்கள் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு மக்களும் தடுப்பூசி போடுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இயக்குனர், விக்னேஷ் சிவனும் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மக்களும் போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :