• JUST IN | சுட சுட

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி : தமிழக அரசு!





தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் கொரோனாவால்்் பாதிக்கப்பட்வர்கள் மருத்துவமனை செல்லும் முன்பே வாகனத்தில் ஆக்ஸிஜன் உதவி பெறும் வகையில் நடமாடும் ஆக்ஸிஜன் வாகனங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ளை மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

கொரோனாவை தடுக்கும் ஒரே வழி ஊரடங்கு தான். அந்த வகையில் ஊரடங்கு நீடிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களில் 4,300 படுக்கைகள் காலியாக உள்ளது. இவற்றை, கொரோனா.தொற்று பாதித்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னையில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

- இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளை நாளை (மே-20) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் அதற்கேற்ப 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :