• JUST IN | சுட சுட

சர்வதேச தர வரிசையில் உலக சாதனை: `சூரரைப் போற்று`!





சுதா கொங்கரா இயக்கத்தில் . சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று திரைப்படம் சர்வதேச ஐஎம்டிபி தரவரிசையில் அதிக ரேட்டிங் பெற்று உலக அளவில் 3 வது இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஏர் - டெக்கான் விமான நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஹீரோவாக சூர்யாவும், கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியும் சிறப்பாக நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். இப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது.

ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ள இந்த திரைப்படம் தற்போது தற்போது உலகளவில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.

அதாவது ஐஎம்டிபி ( IMDB ) என்ற ரேட்டிங் தளத்தில் உலகளவில் நல்ல படங்களுக்கு ரசிகர்கள் கருத்துத் தெரிவிப்பதன் அடிப்படையில் எந்த படம் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை கணக்கிட்டு பட்டியலிடுவர். அந்த வரிசையில் இந்த ஆண்டு நடைபெற்ற ரேடிங்கில் சூரரைப் போற்று திரைப்படம் 10க்கு 9.1 ரேட்டிங் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல தரமான படத்தினை கொடுத்துள்ளார் என சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

மேலும் இந்த ஐஎம்டிபி ரேடிங்கில் உலகளவிலான 1000 படங்களில் முதல் 60 இடங்களில் நான்கு இந்தியப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் 34 - வது இடத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படமும், 58 -வது இடத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படமும், 60- வது இடத்தில் அமீர் கான் நடித்த தங்கலும் இடம் பெற்றுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :