• TRENDING | பர பர

50 ஆயிரம் ரூபாய் : கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய திருநங்கைகள்.





கொரோனா நிவாரண பணிகளுக்கு சென்னையை சேர்ந்த திருநங்கைகள் ரூ. 50,000 தொகையை நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சென்னையை சேர்ந்த திருநங்கைகள் ரூ.50,000 தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகை இருக்கும் என நம்பி வழங்கியுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு பிரபவங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :