• TRENDING | பர பர

ஹேர் கட் சரியாக செய்யலை : போலீசை அழைத்த சிறுவன்!





சலூன் கடையில் தனக்கு சரியாக ஹேர் . கட் | பண்ணவில்லை என்று போலீசை அழைத்த 10 வயது சீன சிறுவன் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார்.

சீனாவை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் சலூன் கடைக்காரர் தான் எதிர்பார்த்த ஸ்டைலில் முடிவெட்டி விட வில்லை என்று கூறி போலீசாரை அழைத்துள்ளார்.

உடனே போலீசார் அங்கு விரைந்து வந்த உடன் அந்த சிறுவனிடம் நடந்தது குறித்து விசாரித்துள்ளனர். அதற்கு அந்த சிறுவன், தான் விரும்பியபடி சலூன் கடைக்காரர் முடி வெட்டாததால், தன் ஹேர் ஸ்டைல் மோசமாகி விட்டதாக கூறி அழுதுள்ளார்.

இதற்குள் இந்த விஷயம் கேள்விப்பட்டு, அந்த சிறுவனின் சகோதரி விரைந்து வந்துள்ளார்.

உடனே அந்த சிறுவனின் சகோதரி இந்த விஷயத்தில் தலையிட்டு பெற்றோரை ஆளாகாமல் இதுபோன்று போலீசார் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அறியாச் சிறுவன்.. தெரியாம செஞ்சிட்டான். இவனை நாங்க கவனிச்சிக்கறோம். நீங்க திரும்பிப் போங்க என்று போலீஸாரிடம் அந்த சகோதரி சொல்ல, உடனே போலீசாரும் அந்த சிறுவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :