• TRENDING | பர பர

பிரதமருக்கு நன்றி : டிவிட்டரில் எடப்பாடி பழனிசாமியின் கலக்கல் பதிவு!





தனது கோரிக்கையை ஏற்று ரெம்டெசிவர் மருந்தினை தமிழகத்திற்கு அதிகரித்து வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி என டுவிட்டரில் பதிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் அதிக மக்களை பாதித்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கைக்காக நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கவும், ரெம்டேசிவிர் மருந்தினை அதிகப்படியாக ஒதுக்குமாறும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே நேற்று தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்தினை மத்திய அரசு அதிகரித்து வழங்கியது.

இந்தநிலையில், தனது கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டினை அதிகரித்து வழங்கிய பிரதமருக்கு நன்றி கூறி எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

I Thank @PMOIndia for increasing Tamil Nadu`s Quota of Remdesivir on my request. The much needed supply would be helpful to the state in treating COVID patients,This would bring respite for thousands of patients` family members waiting in long queues.

- Edappadi K Palaniswami (@EPSTamilNadu)

அதில் மிகவும் அத்தியாவசியமான ரெம்டெசிவிர் மருந்தினை தமிழகத்திற்கு உடனடியாக அதிகரித்து வழங்கியுள்ளீர்கள். இது கோவிட் நோயாளிகளை குணப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் , மருந்துக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில் தங்களுக்கு நன்மதிப்பு மற்றும் மரியாதையை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியின் இந்த டிவிட்டர் பதிவு பிரபலமாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :