• TRENDING | பர பர

25 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி: உதயநிதி ஸ்டாலின்!





தமிழ் நாட்டில் கொரோனா நிவாரண நிதியாக தாராள நன்கொடை தாருங்கள் என்றுு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விிடுத்தார் அதையடுத்து அஜீத் இரண்டரை கோடி,. சூர்யா ஒரு கோடி, செளந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி என்று திரைைைைையுலக பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில். திரைப்பட நடிகரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 25 லட்சம் ரூபாய் நிதி அளித்தார.

மேலும் பல திரைப் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொது நிவாரண நிதிக்காக நன்கொடை வழங்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமாவின் நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தின் சார்பாக 1 கோடி நிதியுதவி கொடுத்துள்ளார். இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிக்காக 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ வாகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதேபோல் பலர் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :