• JUST IN | சுட சுட

ஜப்பானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் கடும் பீதி!





ஜப்பானில் இன்று அதிகாலை 5.28 மணிக்கு 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பசுபிக் கடலில் உள்ள ஹோன்ஷூ தீவில் இன்று காலை 5.28 மணிக்குச் சக்தி வாயநித நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் கட்டிடங்கள் வேகமாகக் குலுங்கியது. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறினர்.

ஜப்பான் தேசிய புவியியல் ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்ட தகவல் :

ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது.

_ இவ்வாறு தெரிவித்துள்ளது.

சக்தி வாய்ந்த இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.மேலும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :