• JUST IN | சுட சுட

அதிமுக முன்னாள் துணை முதல்வர் ஒபிஎஸ்-சின் சகோதரர் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!





அதிமுக-வின் முன்னாள் துணை முதல்வரும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் இன்று பெரியகுளத்தில் காலமானார். அவரது குடும்பத்திற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிவடைந்து பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு நேற்றிரவு திரும்பினார். இந்நிலையில் அவர் இன்று காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் பாலமுருகன் குடும்பத்தினருக்கு அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :