• JUST IN | சுட சுட

சர்க்கரை ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிப்பு : உத்தரகண்ட்டில் அசத்தல்!





இந்தியாவில் கொரோனா 2-ம் அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் திரவநிலை ஆக்சிஜனை நிரப்ப உலோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க அந்த மாநில அமைச்சர் சுவாமி யதீஸ்வரானந்த் உத்தரவிட்டுள்ளார். ஹரித்வாரில் உள்ள கரும்பாலை தயாரிப்பு தொழிற்சாலைகள், ஆக்ஸிஜன் தயாரிக்க ஒப்புக்கொண்டதாக இதுகுறித்து அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து உத்ராகண்ட் மாநிலத்திலும் சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனால் தயாரிக்கும் சர்க்கரை ஆலைகளில் செயற்கை ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்துவது எளிதான காரியம் என்று அமைச்சர் சுரேஷ் ராணா தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக இந்த மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும் என அந்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :