• TRENDING | பர பர

ரம்ஜான் ஸ்பெஷல் : ஓடிடி -யில் ராதே படம் வெளியீடு! சல்மான் கான் அறிவிப்பு!





பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள `ராதே` படத்தின் திரையரங்க வெளியீடு தொடர்பாக நடிகர் சல்மான் கான் மன்னிப்பு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தான் நடித்துள்ள ராதே படத்தை திரையரங்குகளில் வெளியிடும் முனைப்பில் இருந்தார் சல்மான் கான். ஆனால், இப்போது ராதே படம் ரம்ஜான் அன்று நேரடியாக முன்னணி ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசியதாவது:

ரம்ஜான் நாளில் நான் ரசிகர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற விரும்புகிறேன்.இதுபோன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில் மக்களை மகிழ்ச்சியாக இருப்பது அவசியம். அதற்காக ராதே படம் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

மேலும், கொரோனா காலகட்டத்தால் பலருடைய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு நேரடியாக வந்து படம் பார்க்கும் நிலையில் மக்கள் இல்லை. ஆனால் ஓடிடியில் வெளியாகும் படத்திற்கு பெரியளவில் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதுபோன்ற சூழலில் மக்களை மகிழ்விக்க கிடைத்துள்ள வாய்ப்பை பெரிதாக கருதுகிறேன்.

- இவ்வாறு சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களிடம் அளித்த வாக்குறுதியை பற்றி பேசிய சல்மான், "நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். ராதே படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு நீண்ட நாட்களாக காத்திருந்தோம். ஆனால் பெருந்தொற்று காலத்தில் அதற்கான சூழல் உருவாகவில்லை. நிலைமை எப்போது மாறும் என்பது தெரியாத காரணத்தால் ராதே படம் ஓ.டி.டி-யில் நேரடியாக வெளியாகவுள்ளது" என்று தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :