• TRENDING | பர பர

பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார் ரவுடி பேபி சாய் பல்லவி.





நடிகர் தனுஷூடன் ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடிக்் கலக்கிய பிரபல நடிகை சாய் பல்லவி இப்போது முதன் முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி தெலுங்கில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபாஸ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் வெளியான சத்ரபதி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் நாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்கிறார்.

இந்த படத்தின் மூலம் முதன்முதலாக பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார் சாய் பல்லவி.

Comments

Jayashree says :

பாலிவுட்டிலும் பாதம் பதித்து வெல்வார் நம் மலர் டீச்சர் மற்றும் பானுமதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :