• SPARKLES | மினுமினு

கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம் : +2 மாணவி சாதனை!





கொரோனா 2-வது அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்திலையில் மூன்றாவது அலை வரக்்கூடும என்ற எச்சரிக்கை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் முகக் கவசம் அணிவது அத்தியாவசியத்தேவை ஆகிவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரசை அழிக்கும் முக கவசம் ஒன்றை உருவாக்கி சாதனைை படைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் +2 மாணவி திகந்திகா போஸ்.

இவர் தயாரித்துள்ள முக கவசம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரின் சாதனைகள் கண்டு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸை அழிக்கும் முக கவசத்தை அவர் கண்டுபிடித்து இருக்கிறார்.இதற்கு முன்பு காதுகளைப் பாதிக்காத முகக்கவசம், தலையை திருப்பாமலே பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்த மாணவி திகந்திகா போஸ், இந்த கொரோனா வைரஸை அழிக்கும் ஒரு முக கவசத்தை கண்டுபிடித்திருக்கிறார்.

மேற்கு வங்கம் புர்பா பர்தமன் மாவட்டத்தில் வசிக்கிறார் திகந்திகா போஸ். பிளஸ் 2 மாணவியான இவர் கொரோனா வைரஸை முகக் கவசம் அணிவதன் மூலம் முற்றிலுமாக தவிர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இவர் தயாரித்திருக்கும் முக கவசம் மூன்றடுக்காக உருவாக்கப் பட்டுள்ளது. முதல் அடுக்கில் தூசியை வடிகட்டும் மின் காந்த அணுக்கள் உள்ளன. அதை அடுத்து இரண்டாவது அடுக்கின் வழியே காற்று மூன்றாவது அடுக்கில் செல்கிறது. அப்போது அங்குள்ள சோப்பு கரைசல் கொரோனா வைரசை அழித்து தூய்மையான காற்றை சுவாசிக்க வழி செய்கிறது.

சோப்பு கரைசலுக்கு கிருமியை அழிக்கும் சக்தி இயல்பாகவே உள்ளது என்பதால், கொரோனா வைரஸ் கிருமி தொற்றாமல் இருப்பதற்கு இந்த முகக் கவசம் உதவுகிறது.

தான் கண்டுபிடித்த இந்தத் கவசத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளார் திகந்திகா போஸ். இதற்கு முன்பு மூன்று முறை அப்துல்கலாம் விருதுகளை வென்றிருக்கிறார். காதுகளைப் பாதிக்காது முகக்கவசம், தலையை திருப்பாமல் பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்ததற்காக இந்த விருதுகளை அவர் குவித்துள்ளார்.

தற்போது இவர் தயாரித்திருக்கும் இந்த முகக்கவசம் மும்பை கூகுள் அருங்காட்சியத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாணவியின் சாதனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.

Comments

Vaidehi says :

அருமை வாழ்த்துக்கள்

Sujatha says :

Hats off to the young girl.

Sujatha says :

Hats off to the young girl.

Sujatha says :

Hats off to the young girl.

Sujatha says :

Hats off to the young girl.

கிரிஜாராகவன் ஏ14ஹால்மார்க்; says :

அற்புதம். மயன்றால்முடியாத்து இல்லை எனபதை நிரூபித்து விட்டார் தகந்திகா போஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :