• JUST IN | சுட சுட

1 ரூபாய் இருக்கிறதா? அதன் விலை மதிப்பு ரூ.45 ஆயிரம்!





உங்களிடம் பழைய இந்த ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் அதற்கு இப்போது விலை மதிப்பு என்ன தெரியுமா? ரூ.45,000 ஆயிரம்!

பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது சிலருக்கு பொழுதுபோக்கு. அருங்காட்சியங்களிலும் கூட பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்களை பார்க்க முடியும்.

பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பவர்கள், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருப்பார்கள்.

அந்த வகையில் பழைய இந்த ஒரு ரூபாய் நோட்டுக்கு 45,000 ரூபாய் விலை கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஒரு ரூபாய் நோட்டு 1957ம் ஆண்டு அச்சிடப்பட்டதாகவும், அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.பட்டேலின் கையெழுத்தும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் அரிதான இந்த ரூபாய் நோட்டினை காயின்பஜார்.காம் என்ற இணையதளத்தின் மூலம் 44,999 ரூபாய்க்கு உங்களால் விற்பனை செய்ய முடியும். இது குறித்து விரிவான தகவல்களை மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று நேரில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

யம்மாடியோவ்......................................

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :